மேல் மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்றுமுதல்(29.10.2020) மறு அறிவித்தல் வரையில் மேல் மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மூடுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தொழிலாளர் திணைக்களத்தின் ஊழியர்கள் 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.