பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர்  உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பயங்கரவாத தாக்குதலை குறிப்பதாகவும் நைஸ் நகரத்தின் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணை நடந்து வருவதாகக் தெரிவித்தள்ளார்.