பண்டாரவளை மாநகரின் பொது விற்பனை நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினால் பண்டாரவளை மாநகரம் விரைவில் மூடக்கப்படலாமென தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பண்டாரவளை மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பண்டாரவளை மாநகர மேயர் குறித்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மூவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர்களை சிகிச்சைகளுக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.