கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 44,739,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,706,005 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,178,527 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

மேலும் 81,191 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 35 சதவிகிதம் அளவிற்கு அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகப்படியான பாதிப்புகளை உறுதி செய்வதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.