பொகவந்தலாவை பகுதியில் பெண்கள் இருவவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை, கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்திலேயே இவ்வாறு பெண்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பகுதியிலுள்ள மீன் ஏற்றி செல்லும் லொரியின் சாரதியொருவர், அண்மையில் கொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து, குறித்த லொரியின் சாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதியான பெண்களில், ஒருவர் கடந்த 20ம் திகதி பொகவந்தலாவ சிறி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு பூஜை ஒன்றில் கலந்து கொண்டமையினால் குறித்த ஆலயம் மூடப்பட்டு ஆலயத்தில் உள்ள ஆறு பேர் தனிமை படுத்தபட்டுள்ளனர்.
கடந்த 20ம் திகதி பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களையும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சமூகம் தந்து பரிசோதனைக்கான தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொது சுகாதார பரீசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM