அனுராதபுரம், தம்புத்தேக பொருளாதார நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மீகொட பொருளாதார நிலையத்திலிருந்து தம்புத்தேக பொருளாதார நிலையத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மீகொடையிலிருந்து வந்த கொரோனா நோயாளருடன் தொடர்புகளை பேணிய இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதன் விளைவாக தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் சுமார் 100 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். சோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.