மத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானின் அரசு நடத்தும் உயர்மட்ட இஸ்லாமிய அமைப்பு , பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களுக்காக ஒரு புதிய ஆலயத்தை நிர்மாணிக்க புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரு முக்கிய இந்துத் தலைவரான லால் மல்ஹி இந்த தீர்ப்பைப் பாராட்டியுள்ளார். எனினும் தனியார் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதில் பொது நிதியை நேரடியாக செலவிட வேண்டாம் என்று சபை அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ஜூன் மாதம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்து ஆலய  கட்டுமானத்தை திடீரென நிறுத்தியது.

ஆலய நிர்மாணிப்பது ஒரு அவதூறான செயல் என்று கூறி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்த கடும் அச்சுறுத்தல் மற்றும் பதட்ட நிலைகளை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந் நிலையிலேயே இந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு மதகுருமார்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்குவதாக உறுதியளித்த இம்ரான் கான், ஆலய கட்டுமானத்தை அனுமதிக்க முறையான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இஸ்லாமாபாத்தில் இந்துக்களுக்காக செயல்படும் ஆலயங்களில் இல்லை. தலைநகரில் ஒரு பழங்கால ஆலயம் உள்ளது, எனினும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக அதை யாரும் பயன்படுத்துவதில்லை.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் மூவராயிரம் இந்துக்கள் வாழுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.