கொழும்பு, பேலியாகொடை மீன்சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து  மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தில்  சுமார் 25 000 குடும்பங்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை, காத்தான்குடி நாவலடி உட்பட பல  பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான  மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிடிக்கின்ற சொற்ப மீன்களையும் விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுவதாகவும் இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமை நிலைககு தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் ததரிவிக்கின்றனர்.