இன்ஸ்டாகிராமில் அறிமுகமானது புதிய வசதி

By T. Saranya

29 Oct, 2020 | 05:14 PM
image

புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் நேரலை ஒளிபரப்புகளுக்கான கால அளவை 60 நிமிடங்களிலிருந்து நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.

இந்த மாற்றம் உலகளாவியது மற்றும் அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் பொருந்தும்.

இந்த நடவடிக்கைக்கு காரணமாக யோகா பயிற்றுநர்கள், இசைக்கலைஞர்கள், கலைஞர்கள், சமையல்காரர்கள் போன்ற படைப்பாற்றல்கொண்டவர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் பார்வையாளர்களுடன் நீண்ட செயலமர்வுகளை செய்ய உதவுகிறது என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி IP அல்லது கொள்கை மீறல்கள் தொடர்பான பதிவு ஏதும்  இல்லாத "நல்ல நிலையில்" உள்ள கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் 30 நாட்கள் வரை நேரலை ஒளிபரப்புகளை காப்பகப்படுத்துவதற்கான விருப்பத்தையும் சேர்க்கிறது.

"இப்போது உங்கள் நேரலை வீடியோக்கள் உங்கள் காப்பகத்தில் வைக்கப்படும். அவற்றை மட்டுமே நீங்கள் காண முடியும். உங்கள் நேரடி வீடியோக்கள் முடிந்ததும், அவை 30 நாட்களுக்கு உங்கள் காப்பகத்தில் கிடைக்கும். உங்கள் நேரடி வீடியோக்களை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அவற்றை ஐஜிடிவியில் பதிவேற்றலாம். துவக்கத்தில் உள்ள பயனர்களான ஒரு அறிவிப்பு 

இந்த புதிய அம்சம் 'விரைவில்' ஆரம்பிக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அம்சம் `விரைவில்' தொடங்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது. IGTV மற்றும் லைவ் ஸ்ட்ரீமின் முடிவில் `Live Now` பகுதியை புதுப்பிக்கப்போவதாகவும், பிடித்தமான கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களிடமிருந்தும், அவர்கள் பின்பற்றும் நபர்களிடமிருந்தும், ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதல் உள்ளடக்கத்தை மக்களுக்கு வழங்குவதற்கான யோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right