City & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம்

Published By: Priyatharshan

23 Jul, 2016 | 10:34 AM
image

கணினியில் பணியாற்ற வேண்டிய ஆளுமையை கொண்டிருக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் தொழில் ஒன்றை முன்னெடுக்க முக்கிய தேவையாக அமைந்துள்ளது. 

ஆரம்ப நிலையிலும் தொழில்களை முன்னெடுப்பதற்கு நடைமுறை ஆளுமைகளுக்கு மேலதிகமாக இந்த ஆளுமைகள் மற்றும் அறிவு போன்றன கொண்டிருக்க வேண்டியதை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

சிங்கர் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சிங்கர் கணினி கல்வியகம் இன்றைய தொழில் நிலைகளுக்கு அவசியமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆளுமை களை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

தொழிலுடன் தொடர்புடைய கல்வி பயிலல் மூலமான அபிவிருத்தியை பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்கையும் தகைமைகளையும் வழங்கும் லண்டன் City and Guilds கல்வியகத்துடன் இணைந்து அலுவலகத்தில் செயலாற்ற அவசியமான அடிப்படை தகவல் தொழில்நுட்ப கற்கைகளுக்கு சான்றிதழை வழங்க சிங்கர் கணினி கல்வியகம் முன்வந்துள்ளது.

தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளவும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஊவைல City & Guilds ஈடுபட்டுள்ளது. சகல City & Guilds சான்றுகளும் பங்குபற்றுநர்களுக்கு அவசியமான திறமைகளையும் ஆளுமைகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த தகைமைகள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,

“City & Guilds குழுமத்துடன் இணைந்து சிங்கர் கணினி கல்வியகத்தினால்ரூபவ் வியாபாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

சிங்கர் கணினி கல்வியத்துடன் இணைந்து City & Guilds சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்வது என்பது பங்குபற்றுநர்களுக்கு தம்மில் காணப்படும் திறமைகளை வெளிப்படுத்தி ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

City & Guilds புரடைனள தெற்காசியாவின் வணிக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் ஷகூர் ஃபாயிம் கருத்து தெரிவிக்கையில்,

“சிங்கர் கணினி கல்வியகத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்ப ஆளுமைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தமது நகரங்களில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். இதன் மூலம் தூரப் பிரதேசங்களுக்கு பயணித்து சர்வதேச தகைமைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் நிவர்த்தி செய்யப்படுகிறது” என்றார்.

செயல்திறமை சான்றிதழ் மூலமாக பங்குபற்றுநர்களுக்கு பாதுகாப்பான தொழில் சூழல்களை பேணுவது word processing மற்றும் spreadsheets ஆவணங்களை உருவாக்குவது மற்றும் எடிட் செய்வதுரூபவ் அடிப்படை தரவுகளை உருவாக்கி பயன்படுத்துவது மற்றும் presentation text மற்றும் கிரஃபிக்ஸ்களை எடிட் செய்வது, மின்னஞ்சல்களை கையாள்வது மற்றும் இணையத்திலிருந்து தகவல்களை தேடிக் கொள்வது அடிக்கடி பயன்படுத்திய இணையத்தளங்களை பார்வையிடுவது போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்படும்.

ஆளுமை செயல்திறமை மூலமாக தொழிலில் எவ்வித தகைமைகளும் இன்றி பணியாற்றுவோருக்கு குறித்த தகைமையை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

சிங்கர் கணினி கல்வியகத்தின் நோக்கம் யாதெனில் புத்தாக்கமான மற்றும் தரமான பயிலல் அனுபவங்களை மக்களுக்கு வழங்கி அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் எதிர்பார்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. 

இந்த உயர் தரம் வாய்ந்த தகைமை என்பது கல்வியகத்தை ஏனைய கல்வியகங்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த மட்டத்தில் பேண உதவியாக அமைந்துள்ளது.

கல்வியகத்தின் எதிர்கால திட்டங்களின் பிரகாரம் பின்தங்கிய பிரதேசங்களில் இந்த கற்கைகளை நெகிழ்ச்சியான மற்றும் உதவும் முறையில் வழங்குவதன் மூலமாக பயிலுநர்களுக்கு தமது முழுத்திறமைகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கச் செய்வதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நோய்க்கிருமிகளினால் பரவும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியை...

2025-06-19 19:09:28
news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32