நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய எண்ணிக்கைக்கு அமைவாக நேற்று (28) மாலை அளவில் மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணி நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த மட்டத்தை அடைந்திருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பொது மக்கள் சுகாதார சேவை) விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இந்த நிலை முழுமையாக சமநிலை அடைவதற்கு சில காலம் செல்லும். இருப்பினும் கம்பஹாவில் நோயாளர்கள் அடையாளம் காணும் எண்ணிக்கையை குறைந்த மட்டத்திற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் ஆரம்பத்தில் , சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாபேம கொரோனா தொடர்பாக புதிய தரவுகளை சமர்ப்பித்தார்.
கடந்த சில தினங்களில் பெரும் எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்த அவர் 24 பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையங்கள், 37 சிகிச்சை மத்திய நிலையங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா நோயாளர்களுக்காக 5,209 கட்டில்கள் இருப்பதாகவும் 4,729 கொவிட் நோயாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுகின்றனர்.
மேலும் 369 கட்டில்கள் எஞ்சியிருப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதன் போது குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் ஏதோ ஓரு வகையில் அனர்த்த வலையம் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்ட சில பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக நாட்டின் எந்த பகுதிகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள் என்பதை முன்கூட்டியே கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரவித்தார்.
சுகாதார பிரிவினரால், இலக்கை நோக்கி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களில், நோயாளர்கள் அடையாளங் காண்பதை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை பொது மக்களுக்கு தற்பொழுது தெளிவு படுத்தியிருப்பதாகவும் இதற்கமைவாக செயற்படவேண்டிய முறை இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இதன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிதாக இருக்கும். கண்டறியப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை பூச்சியத்திற்கு இட்டுச்செல்ல முடியாது. இதில் அதிகரிப்பு சில காலத்திற்கு இடம்பெறக்கூடும்.
இதற்கு காரணம் நோயாளர்களை கண்டறிந்து சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்தும்; முன்னெடுத்தல் இவ்வாறான வைரஸ் கொத்தணி ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிருமி தொற்று நீக்கத்தை மேற்கொள்ளும் பணி நோயாளர்கள் அடையாளம் காணப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இதனால் இந்த நடவடிக்கையில் எதிர்நோக்கப்படும் நிலை மிகவும் பாரியதாக இருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கையின் மூலமாக வெற்றி கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM