கொவிட்-19 இனால் பாதிக்கப்படாத உலகின் இறுதி சில இடங்களில் ஒன்றான மார்ஷல் தீவு குடியரசில் இரு புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று ஹவாய் தீவிலிருந்து மார்ஷல் வந்த ஒரு அமெரிக்கத் தளத்தில் இரணடு நோயாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பசுபிக் தீவுகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

35 வயதான பெண்ணும் 46 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு மார்ஷல் தீவின் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

மார்ஷல் தீவில் குறித்த நோயாளர்கள் இருவரும்  சமூகத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசிபிக் நாட்டின் பெரும்பாலான தீவு நாடுகள் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் தங்கள் எல்லைகளை மூடின.

இந் நிலையில் ஜூன் மாதத்தில், மார்ஷல் தீவுகள் பெரும்பாலும் அமெரிக்க இராணுவத் தளத் தொழிலாளர்களை அனுமதிப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.