இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 517 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,40,203 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,20,527 ஆக உயந்ந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலையில் தங்கி 6,03,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து  73,15,989 பேர் குணமடைந்துள்ளார்கள்.

நேற்று (28.10.2020) மாத்திரம் 10,65,63,440 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்துள்ளது.