ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்குமாறு வலியுறுத்தி சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுதது வருகிறது.

உலக அளவில் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் கால்பந்து, கூடைப்பந்தை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கிரிக்கெட் உள்ளது.

பாரிஸில் நடைபெற்ற 1900 ஒலிம்பிக் வரை கிரிக்கெட் விளையாட்டும் ஒலிம்பிக்கில் விளையாடப்பட்டது. 

இந்நிலையில் உறுப்பு நாடுகளிடம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் கிடைக்கக்கூடிய நிதி உதவி குறித்த விவரங்களை கேட்டுள்ளது ஐ.சி.சி.

எனினும் இதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

2023 வரை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை இறுதி செய்துள்ளது ஐ.சி.சி. அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைந்தால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் மாதிரியான லீக் தொடர்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏற்படுவதோடு வருவாய் இழப்பும் ஏற்படும் என்பதால் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இது குறித்து கார சாரமாக விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.