பிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம்

Published By: Vishnu

29 Oct, 2020 | 07:08 AM
image

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸில் முடக்கல் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது. 

இதன்போது மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அல்லது மருத்துவ காணரங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரேன் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், மதுபானசாலைகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும். எனினும் பாடசாலைகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும்.

பிரான்சில் கொவிட்-19 நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த மடத்தில் உள்ளன. செவ்வாயன்று 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடைாயளம் காணப்பட்டனர்.

பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 1,280,346 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 35,834 உயிரழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஜேர்மனி

ஐரோப்பாவின் பல பகுதிகளை விட ஜேர்மன் குறைந்த தொற்று வீதத்தைக் கொண்டிருந்தாலும், அண்மைய வாரங்களில் வைரஸ் பரவி வரும் வேகம் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் 16 மாநில தலைவர்களின் ஒப்புதலுடன் முடக்கல் விதிமுறைகளானது நவம்பர் 2 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா கூறியுள்ளார்.

இக் காலப் பகுதியில் பாடசாலைகள் திறந்திருக்கும், சுற்றுலா நடவடிக்கைகளானது நிறுத்தப்படும் சமூக தொடர்புகள் அதிகபட்சமாக 10 நபர்களை கொண்ட இரு வீடுகளுக்கு மட்டுப்படுத்தப்படும்.

மதுபானசாலைகள் மூடப்பட்டு உணவகங்களின் திறப்பு விகிதம் மட்டுப்படுத்தப்படும். டட்டு, மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஜேர்மனின் முடக்கல் நிலையை மறு பரிசீலனை செய்ய மேர்க்கெலும், மாநில தலைவர்களும் நவம்பர் 11 ஆம் திகதி காணொளி மூலம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் எடுப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனில் புதன்கிழமை 14,964 புதிய கொரோனா தொற்றாளர்களும், 85 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

ஜேர்மனின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 479,621 ஆகவும், உயிரழப்பு எண்ணிக்கை 10,218 ஆகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52