தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம் கணேசமூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம் சுஹைர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.