ஸ்ரீலங்கா கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இப் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடல் :  https://youtu.be/qggWL2c5vPk

சிங்களம்  பாடல் : https://youtu.be/HJ1_A8XW_mU

ஆங்கில பாடல் : https://youtu.be/aQXDUbbZX8k

எல்.பி.எல் தீம் பாடல் மற்றும் இசையை இலங்கையின் பிரபல பாடகர்களான பாத்தியா மற்றும் சந்தூஷ் சரிகம இசை குழுவுடன் இணைந்து தயாரித்து பாடியுள்ளனர்.

இப்பாடலின் தமிழ் வரிகளை கே.கே.பிரகாஷுடன் இணைந்து ஏ.டி.கே எழுதியள்ளதுடன் பாடகர் ஏ.டி.கே,  ராய் ஜாக்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஆங்கில பதிப்பில் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷியாம் டீன் இடம்பெற்றுள்ளார். ரந்தீர் விதானா ஆங்கில பதிப்பிற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார். யோகன் அபேகூன் சிங்கள விளக்கக்காட்சியை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.