யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, மாத்தளை,  மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தீயணைப்பு பிரிவிற்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்இடம்பெற்றது.

இதன்போது அவ்வாகனங்களுக்கான திறப்புகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அம்பியூலன்ஸ் வண்டிகளும் குறித்த 5 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.