தமது இலக்கு குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள தகவல்

Published By: J.G.Stephan

28 Oct, 2020 | 05:28 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்  இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதோடு இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதே  எனது விஜயத்தின்  நோக்கமாகும்.

சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம். எனினும் எமது இலக்கு இதுவேயாகும் என்று அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நாடு என்று சுட்டிக்காட்டியிருக்கும்  அவர் நீதி வழங்கல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவை தொடர்பில்  அரசாங்கம்  அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலர்  மைக் பொம்பியோ இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிதைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தார்.

அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு தனது விஜயத்தின் நோக்கம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில்  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கேள்வி : அமெரிக்க  ஜனாதிபதித்தேர்தல்  நடைபெறவிருக்கும் நிலையில், நீங்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இலங்கையுடன் இணைந்து சீனாவிற்கு எதிரான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியாக இதனைக் கருதமுடியுமா?

பதில் : நான் ஏற்கனவே கூறயதைப்போன்று இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அத்தோடு இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதும் எமது நோக்கமாகும். சீனாவின் இலக்கு வேறாக இருக்கலாம். எனினும் எமது இலக்கு இதுவேயாகும்.

கேள்வி : இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடையை நீக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன் தற்போதைய நிலைவரம் என்ன?

பதில் : இந்த நடைமுறைகள் ஓர் ஒழுங்கின் அடிப்பையிலேயே முன்னெடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59