பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 6 நாட்களுக்கு பின்னர் மீன்பிடி படகுகளில் இருந்த மீன்களின் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (27) காலை ஆரம்பமானது.

இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தின் பங்களிப்புடன் சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.

பேருவளை கொரோனா தொற்று நிலை காரணமாக கடற்தொழில் சார்ந்த வர்த்தகர்கள் மீன்களை துறைமுகத்தில் இறக்கி விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.