(இராஜதுரை ஹஷான்)

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களை நாளாந்தம் காலை 5 மணி தொடக்கம் பகல்  2 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

COLOMBO, SRI LANKA - FEBRUARY 28, 2017: Street Near The Pettah.. Stock  Photo, Picture And Royalty Free Image. Image 92971569.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு புறக்கோட்டை மொத்த விற்பனை பகுதியில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மொத்த விற்பனை சேவை நிலையங்களில் நூற்றுக்கு 50 சதவீதமான ஊழியர்களை உள்ளடக்கி சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

விற்பனை நிலையங்களுக்கு வரும் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.