ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார்.

செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், கொரோனா தொற்று தொடர்பில் எந்தவிதமான அறிகுறிகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை என வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினம் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கான உத்தேசிக்கப்பட்ட உத்தியோபூர்வ விஜயங்களையும் செர்ஜி லாவ்ரோவ் ஒத்தி வைத்துள்ளார்.