அமெரிக்காவின் முதலீடு, அபிவிருத்தியுடன் இலங்கை சுதந்திரமான இறைமை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பின்னரே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்காவின் முதலீடு, அபிவிருத்தியுடன் இலங்கை சுதந்திரமான இறைமைகொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதுடன் சீனா வேறு நோக்கத்துடன் உள்ளதென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.