கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக  நடித்ததுடன், தமிழ் மொழியில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே .

அண்மையில், இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராதிகா ஆப்தேவும் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கியுள்ளாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது ராதிகா ஆப்தேவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. விசா பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விசா எளிதாக கிடைத்துவிடும் என்று அறிந்தேன். அதனால் தான் திருமணம் செய்தேன். ஆனாலும் இது நியாயமற்ற செயல் தான்” என்றார். சய