பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கான இரண்டாவது அலை நாட்டில் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதுவரை அந்நாட்டில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  6,745 பேர் உயிரிழந்து உள்ளனர்.

3 இலட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கான இரண்டாவது அலை தொடங்கி விட்டது.

இதுபற்றி பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு சுகாதார உதவியாளர் கருத்து தெரிவிக்கும்போது, ஒரு சில வாரங்களுக்கு முன் நாட்டில் நாளொன்றுக்கு 400 முதல் 500 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.

ஆனால், இந்த எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 700 முதல் 750 பேர் வரை உயர்ந்து உள்ளது.  நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகரித்து உள்ளது.  கொரோனா பாதிப்பு விகிதம் நாட்டில் 2.5 முதல் 2.75 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.