தொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டவுள்ளது.

பாராளுமன்ற பொலிஸ் பிரிவுடன் இணைந்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொவிட் தொற்று நோய்க்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டமையால், பாராளுமன்ற வளாகத்தை மூடி முற்றுமுழுதாக தொற்றுநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நேற்றும் (27) நேற்று முன்தினமும் (26) பாராளுமன்ற வளாகம் முற்றும் முழுதாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றின் செயற்பாடுகள் வழமைபோல் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.