12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் “கோப்ரா“படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார். இர்பான் பதான் இன்று தனது பிறந்த நேற்று கொண்டாடிய நிலையில் ‘கோப்ரா’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 மேலும் பிரெஞ்ச் இண்டர்போல் அதிகாரி அஸ்லான் எல்மாஸ் என்ற கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடிக்கின்றார் என்ற தகவலையும் படக்குழுவினர் அறிவித்துள்ள.

’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன்  ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.