வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித சிக்கலும் இல்லை! -பிரதி பொலிஸ்மா அதிபர்

Published By: Jayanthy

27 Oct, 2020 | 11:17 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது. என பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத்துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. நேற்று வரை சுமார் 35 000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வௌ;வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதற்கான உத்தியோக பூர்வ அறிவித்தல் சுகாதாரத்துறையினரால் ஒட்டப்படும். அந்த அறிவித்தல் ஒட்டப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இந்த கண்காணிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதோடு சட்டத்திற்கேற்ப அனைவரும் செயற்படுவார்களாயின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் பிரச்சினையாகாது. என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15