நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இரு தினங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும்,  கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை தவராமல் பின்பற்றி தமது கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.  சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.