அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ சற்று சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.

ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் கொண்ட குழு நேற்று (27) இந்தியா வந்தடைந்த நிலையில் இன்று  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை 7.37 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அவர்களின் அழைப்பின் பேரில்  இலங்கை வந்துள்ள இவர் இவ் விஜயத்தின் போது,

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஈடுபாடு குறித்து இலங்கை அரசியல் தலைவர்களுடன்  உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.  

வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிவிகார அமைச்சில் சந்திக்கவுள்ளதுடன் 

அவருடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திபிலும் கலந்து கொள்ள உள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  கொழும்பு, கொச்சிகடை  தேவாலயத்திற்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில் அவர்  நாளை மதியம் இலங்கையிலிருந்து  மாலத்தீவுக்கு தனது விஜயத்தை தொடர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்