மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை  பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று செவ்வாய்க்கிழமை (27)  உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவத்தார்.

குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு பத்தரமுல்லை  பகுதியிலுள்ள மீன்சந்தைக்கு சென்று பொது போக்குவரத்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு வந்தடைந்துள்ளார் எனவும் அவர் பிரயாணித்த பஸ்வண்டி மற்றும் அதில் பிரயாணம் செய்தவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இற்போது கொரோனா தொற்றால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 வயது உடைய ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு மேலும் கோட்டுக் கொண்டுள்ளார்.