ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மாதாந்த மின் கட்டண விதிகளின் அடிப்படையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கம்பாஹா மாவட்டம் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மாதாந்த கட்டணங்கள் செலுத்துவதற்கான கால அவகாசத்தின் அடிப்படையில் மின் இணைப்பினை துண்டிக்க ண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டு நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள தடையற்ற மின்சாரத்தை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.