கொழும்பு மாநகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும்  ஏழு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் கடமைகளில் ஈடுபடடுத்தப்பட்டவர்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டில் இதுவரை  8,413 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இன்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.