தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஆரம்பமாகி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.