மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்  தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா பரவல் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.