பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் இன்று (27) பகல் துன்ஹிந்த பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளதோடு விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.