புற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்

Published By: J.G.Stephan

27 Oct, 2020 | 04:04 PM
image

பொதுவாக பழங்கள் என்றாலே, சத்துக்கள் அதிகமெனவும், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிந்திருக்கிறோம். கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். கொய்யா பழம் சாப்பிடுவதால் பலவேறு நன்மைகள் உண்டு. 

* உடல் எடை குறையும்கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.




*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு சீரடையும்.

* இரத்த சோகையை போக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.

* புற்று நோய் வராமல் காக்கும்

கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.

* ஆரோக்கியமான செரிமானம்

கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

* இரத்த அழுத்தத்தை குறைக்கும்

கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04