இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது

Published By: Digital Desk 3

27 Oct, 2020 | 03:00 PM
image

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

இன்றையதினம்  மேலும் 110 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், 39 பேர் ரம்புக்கன வைத்தியசாலையிலிருந்தும், 24 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும், 14 பேர் கம்புருகமுவ வைத்தியசாலையிலிருந்தும்,13 பேர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்தும், 10 பேர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும், மினுவங்கொடை வைத்தியசாலை மற்றும் லக்கல பல்லேகம வைத்தியசாலையிலிருந்து தலா 5 பேரும் பூரண குணமடைந்துள்ளதாக என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,043 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 8,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 4,354 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 445 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55