இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவில் தண்ணீர் இருப்பதை  முதன்முதலில் கண்டுபிடித்தது. 

நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.இந்நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.