(எம்.ஆர்.எம்.வஸீம்)

சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஆசிய பிராந்தியத்தில் சுதந்திர வலயம் ஒன்றை ஏற்படுத்துவதே மைக்பொம்யோவின் விஜயத்தின்நோக்கமாகும்.

அதனால் வல்லரச நாடுகளின் அதிகாரபோட்டிக்கு இலங்கையை இறையாக்க அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதிவழி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.