நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'களத்தில் சந்திப்போம்' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் என் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, ரோபோ ஷங்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, நடிகைகள் ரேணுகா, ஸ்ரீரஞ்சனி ஆகியோருடன் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் 'பிசாசு' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை ப்ரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் விஜயதசமியை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்த டீசரில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள நட்பு, காதல், சென்டிமென்ட் ,எக்சன் என முழுமையான கொமர்ஷல் கலவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கிறது? அல்லது பட மாளிகையில் வெளியாகவிருக்கிறதா? என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM