பாகிஸ்தானின் பெஷாவார் பகுதியில் ஏற்பட்ட ஒரு பாரிய வெடிப்பில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

பெஷாவரின் திர் காலனியில் அமைந்துள்ள மதராஸா ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த மதரஸாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான பையொன்றை விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.