பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 17 மாணவர்களுக்கு உடனடி வகுப்புத் தடை விதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், பொறியியல் மற்றும் முகாமைத்துவப் பிரிவில் கல்வி பயின்று வரும் 17 மாணவர்களுக்கே இவ்வாறு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடையானது 2 வாரத்திலிருந்து 4 வாரங்கள் வரை நீடிக்கக்கூடுமென நம்பப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.