கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட  வெடிபொருட்கள் பாதுகாப்பாக மீட்பு

By T Yuwaraj

27 Oct, 2020 | 10:38 AM
image

கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் இன்று நீதிமன்றின் அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டடுள்ளது. 

நேற்று முந்தினம் குறித்த காணியில் வெடிபொருட்கள் அடையாளம் காணபப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. 

குறித்த காணியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் அவற்றை அகற்றவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் அப்பகுதியில் காணப்பட்ட வெடி பொருட்கள் விசேடஅதிரடிப்படையினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாதவை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகள் முகாம் அமைத்து இருந்தமையைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த நிலையில் கடந்த வருடமளவில் குறித்த காணி விடுவிக்கப்பட்டது  

குறித்த வெடி பொருட்கள் எத்தரப்புக்கு சொந்தமானவை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:19:20
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08