2.37 பில்லியன் டாலர் வரை மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போயிங் தயாரிக்கப்பட்ட 100 கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை தாய்வானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் திங்களன்று அறிவித்துள்ளது.

அதன்படி 1.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட மூன்று ஆயுதங்களை தாய்வானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந் நிலையில் இந்த  நடவடிக்கையானது தாய்வான் மீதான சீனாவின் பொருளாதாரத் தடை அச்சுறுத்தலைத்தலையும் தூண்டியுள்ளது.

சீனாவின் இராணுவ விரிவாக்கம் மற்றும் ஆத்திரமூட்டலை எதிர்கொண்டுள்ள தாய்வான் தொடர்ந்து பாதுகாப்புத் திறனை நவீனமயமாக்குவதையும் சமச்சீரற்ற போர் திறன்களை விரைவுபடுத்துவதையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.