இலங்கையில் இடம்பெற்ற 2016 Coffee Bean & Tea Leaf World Barista போட்டி : 21 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு

Published By: Priyatharshan

22 Jul, 2016 | 04:24 PM
image

உலகின் மிகவும் திறமை வாய்ந்த பரிஸ்டாமார் கொழும்பில் ஜுலை 18 முதல் 20 ஆம் திகதி வரை ஒன்றுகூடி தமது ஆளுமைகளை The Coffee Bean & Tea Leaf World Barista போட்டியில் வெளிக்காட்டியிருந்தனர்.

இலங்கையில் முதல் தடவையாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த போட்டிகளில் 100க்கும் அதிகமான போட்டியாளர்கள் அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா, கிழக்கு மலேசியா,புரூனெய், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தியா, பங்களாதேஷ், கட்டார், ஜோர்தான், குவைட், பஹ்ரெய்ன் மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்றிருந்தனர்.

உலகின் மாபெரும் கோப்பி அதிகார சபையும், சர்வதேச ரீதியில் மாபெரும் கோப்பி வியாபார சம்மேளனமாகவும் திகழும் Specialty Coffee Association of America (SCAA) வின் விதிமுறைகளின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகள், 15 நிமிடங்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அக்காலப்பகுதியினுள் espresso வகையான மூன்று கோப்பிகளை தயாரித்து பரிமாற வேண்டும். இதில் an espresso, a cappuccino மற்றும் ‘signature’ drink  போன்றன அடங்கியுள்ளன.

இதை நடுவர்களுக்கு பரிமாற வேண்டும். ஒரே வகையில் நான்கு கோப்பைகளை தயாரிப்பதன் மூலம் மொத்தமாக 12 பானங்களை தயாரிக்க வேண்டும்.

ஒவ்வொரு தயாரிப்பும் அதன் நறுமணம், சுவை மற்றும் தயாரிப்பின் தரம், பரிமாறும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும். ‘specialty drink’ என்பது போட்டியாளர்களுக்கு தமது திறமைகளையும், ஆக்கத்திறனையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும். சாதாரண espresso வகை பானத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், கடந்த காலங்களில் இந்த போட்டியின் மூலமாக பல விசேடமான மற்றும் புத்தாக்கமான பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

The Coffee Bean & Tea Leaf® இன் இலங்கையின் செயற்பாடுகளின் உரிமையாளரும் செயற்பாட்டாளரும், Calamander குரூப்பின் தலைவருமான ரோமன் ஸ்கொட் கருத்துத் தெரிவிக்கையில்,

“இது போன்ற பெருமைக்குரிய நிகழ்வை இலங்கையில் முன்னெடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். 

இலங்கையில் Coffee Bean வர்த்தக நாமம் காண்பித்துள்ள வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு கிடைத்த கௌரவிப்பாக இதை நாம் கருதுகிறோம். இந்த நிகழ்வின் மூலமாக இலங்கையின் செயற்பாட்டாளராக நாம் காண்பித்துள்ள வளர்ச்சியை குறிப்பதுடன், இலங்கையின் பிரத்தியேகமான பெறுமதிகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்” என்றார்.

“எமது விருந்தோம்பல் பங்காளர்களான OZO, The Galle Face மற்றும் ஹில்டன் ஆகியவற்றுடன் கைகோர்த்திருந்ததன் மூலமாக, எமது போட்டியாளர்களின் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த களம் கிடைத்திருந்ததை உறுதி செய்திருந்தோம். அத்துடன் மதிப்பு வாய்ந்த நடுவர்கள் மற்றும் சர்வதேச உதவி அணிகள் ஆகியோருக்கு இலங்கையின் விருந்தோம்பல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருந்தது.

அத்துடன் எதிர்காலத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்” என்றார்.

இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக ஜுலை 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டிருந்ததுடன், Coffee Bean & Tea Leaf Asia Pacific இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி எரிக் ஃபூ கலந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக, இந்த ஆண்டின் நிகழ்வின் போது, இலங்கையின் சொந்த பாரம்பரிய நாமமாக தேயிலையை ஊக்குவிக்கும் வகையில், Global Tea Master-class எனும் போட்டியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு தேயிலை பெருந்தோட்டமொன்றுக்கு பயணம் செய்யும் அனுபவமும் வழங்கப்படுகிறது. The Coffee Bean & Tea Leaf® இனால் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரிமாறப்படும் தேநீரில் இலங்கையின் பொகவந்தலாவ பிராந்தியத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலை பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் தேயிலைத் துறைக்கு மற்றுமொரு பெறுமதி சேர்க்கும் விடயமாக இது அமைந்துள்ளது.

The tea master class நிகழ்வை The Coffee Bean இன் சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் டீ கன்டியா முன்னெடுக்கவுள்ளார். லொஸ் ஏன்ஜல்ஸ் நகரிலிருந்து இவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2014 இல் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான இலங்கை தேயிலை தூதுவராக நியமிக்கப்பட்ட டீ கன்டியா, சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற தேயிலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நஷனல் பிரான்ட் சிலோன் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ரோமன் ஸ்கொட்ரூபவ் நடுவர்கள் குழுவில் அங்கம் வகித்ததுடன், இவருடன் Gruppo La Cimbaliஇன் மொஹமட் லம்சாரா, ஊழககநந டீநயn ரூயஅp; வுநய

டுநயகஇன் அங்கத்துவ வியாபார முகாமையாளர் ஹஃபீசுல் ரஹ்மான் அப்துல்லா மற்றும் Coffee Bean & Tea Leaf இன் பயிலும் அங்கத்துவ வியாபார முகாமையாளர் சாரா லியொங் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

OZO ஹோட்டல்ஸ் இனால் இந்த போட்டிகளில் பங்குபற்றுவோருக்கு அறை தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டதுடன், The Galle Face ஹோட்டலில் மாபெரும் இராப்போசண உணவு வேளை முன்னெடுக்கப்பட்டு, ஹில்டன் ஹோட்டலின் புகழ்பெற்ற Curry Leaf உணவகத்தில் சர்வதேச விருந்தினர்களுக்கு இலங்கையின் சுவை மிகுந்த உணவு வகைகளை சுவைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

போட்டியின் espresso  இயந்திரங்களுக்கான அனுசரணையை Waverley Pvt. Ltd வழங்கியது. வழி-top-of-the-line La Cimbali espresso இயந்திரங்களுக்கான இலங்கையின் உள்நாட்டு முகவர்களாக இந்நிறுவனம் திகழ்கிறது. 

இந்த போட்டிக்காக விசேடமாக நிறுவப்பட்டுள்ள இயந்திரமான M100 மாதிரியும்  இந்நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

இதேவேளை, ஃபொன்டெரா இந்த போட்டிகளுக்கான பால் விநியோகத்தை வழங்க கைகோர்த்துள்ளது. அங்கர் பசுப்பால் இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. Coffee Bean தயாரிப்புகளின் முதல் தர தெரிவாக அங்கர் பால் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11