கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வலஹபிட்டிக்கும் நாத்தாண்டிக்கும் இடையில் வைத்து  இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.  

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு சிலாபம் நோக்கிச் சென்ற ரயிலில் முன்னே இவ்வாறு இவ்விளைஞர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளம வடக்கு அம்பகெலே பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு உதயங்க (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.  

இவ்விளைஞர் சிலாபம் நகரில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தவர் எனத் தெரிய வருகின்றது. 

குறித்த ரயில் நாத்தாண்டி புகையிரத நிலையத்தைத் தாண்டி சிலாபம் வந்து சென்றுகொண்டிருக்கையில் ரயில் பாதைக்கருகில் காத்திருந்துள்ள இளைஞர் புகையிரதக் கடவையில் தலை வைத்து படுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இவர் யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு குறித்த யுவதியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் மனவிரக்திக்குள்ளாகி இவ்வாறு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.