தென் கொரியாவின் முதல் இடத்தில் உள்ள செல்வந்தரான சம்சுங் மின்னணுவியல் (Electronics) நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்.

2014-ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லீ குன் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக சம்சுங் குழுமம் அறிவித்துள்ளது. 

லீ குன் ஹீ

சியோல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 78 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய சொத்துக் கணக்கு மே மாத நிலவரப்படி சுமார் 375 பில்லியன் டொலராகும்.

லீ குன் ஹீ தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு 1987ஆம் ஆண்டு சம்சுங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார்.

அவரது காலத்தில்தான் சம்சுங் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சி கண்டது.