தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்

Published By: Digital Desk 4

26 Oct, 2020 | 05:39 PM
image

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் மெரைன் பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை பறிமுதல் செய்துள்ளனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு கடற்கரையில்  இன்று திங்கட்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் வெளிச்சிவீட்டின் அருகே நடுக்கடலில் உரிய பதிவு எண்  இல்லாத  நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

 இதனை கண்ட  மண்டபம்  மெரைன் பொலிஸார் படகில் ஏறி சோதனை செய்தனர். 

அப்போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்ததையடுத்தது நாட்டு படகை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு எடுத்து சென்று  மெரைன் பொலிஸார் மேற்கொண்ட  விசாரணையில்  நாட்டுபடகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும் படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.  

இந்தப் நாட்டுபடகு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்தி செல்வதற்காக பாம்பன்  வந்ததாகவும் இலங்கையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது வருவதால் வார இறுதி நாட்களில் தளர்வு இல்லா ஊரடங்கு அமுலில் இருந்ததால் இலங்கை மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள்  அனுமதிக்கவில்லை, 

இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் இலங்கை பகுதிக்கு செல்ல முடியாததால் சமையல் மஞ்சளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் பாம்பனில் நாட்டுபடகை விட்டு விட்டு சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என  மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்  தெரிவித்தார். 

 மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவீஸ்ச் பாம்பன் வடக்கு கடற்கரையில் கைப்பற்றப்பட்ட சமையல் மஞ்சளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களிடம் விசாரனை நடத்தி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:35:54
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதி பொதுமக்கள்...

2025-03-26 16:38:12
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39