நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இராணுவத்தின் விசேட மோட்டார் சைக்கிள் படையணி குழுவினரால் கொழும்பு நகர எல்லைக்குள் நேர்ந்தபடி மக்களின் உடல் வெப்பநிலையை அளவிடும் பணியில் ஈடுப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ விசேட மோட்டார் சைக்கிள் படையின் 2 குழுக்கள் கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் ஏனைய 3 குழக்கள் கிராண்பாஸ் பிரதேசத்திலும் இவ்வாறு உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.